Monday, October 23, 2006

நன்றல்லது அன்றே மறப்பது - எப்படி?

இன்று முதன் முதலாக டென்னிஸ் விளையாடினேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை விளையாடுவதற்கு உந்திய பிஜாய்க்கு என் நன்றி.

இவ்வளவு நாட்களாக அலுவலகம் விட்டு வந்து உருப்படியாக எதுவும் செய்ததில்லை. 5 மணிக்கே வந்து விட்டாலும் (ஆம், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் இருந்தாலும் எனது பணி பொதுவாக 5 மணிக்குள் முடிந்து விடும்.), நன்றாக சாப்பிட்டு விட்டு, வெட்டியாக யாருடனோ chat பண்ணிக் கொண்டோ, தூங்கியோ, பொழுதைப் போக்கி கொண்டு இருந்தேன். இன்று முதல் ஒரு வழி கிடைத்து விட்டது :)

இதையெல்லாம் விட தேவையில்லாத, மனதைக் காயப்படுத்தும் நினைவுகள் எங்கோ போய் விட்டன. வள்ளுவர் மிகவும் எளிதாக சொல்லி விட்டு போய் விட்டார்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

இரண்டாவது பாதி எவ்வளவு கடினம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். எனவே, என்னைப் போல் யாரேனும் இருந்தால், ஏதேனும் புதிதாக முயற்சி பண்ணுங்கள். அதில் முன்னேற வழியைத் தேடுங்கள். எனது அனுபவத்தைக் கூறினேன். அறிவுரை அல்ல...

நமது மகிழ்ச்சி நமது கையில் இருக்கிறது.. யாரையும் சார்ந்து அல்ல.. ரஜினி சொல்வது போல் சொன்னால், "உனது மகிழ்ச்சி உன்னுடன் உள்ளது"... :)